பொலிஸ் மா அதிபரை பதவி நீக்குங்கள்; ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் !

0
411

சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர் குழு கூட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கூட்டத்தில்  கடும் விமர்சனம்

இதன்போது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலர் பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகளை விமர்சித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாக பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலரும் கடுமையாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அத்துடன், சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு இதன்போது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித பதிலும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து வருவதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.   

பதவி நீக்குங்கள்; ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் கொடுக்கும் மொட்டு கட்சி | Budding Party Pressure President