ஆசனம் என்பது உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட நேரம் வைத்திருக்கும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிப்பதை யோகாசனம் எனலாம்.
இவ்வகையான உடற்பயிற்சிகள் செய்வது முதுகின் தசை, எலும்புகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் அஜீரண பிரச்சனைகள், சோம்பல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வைத் தருகிறது.
அந்த வகையில் அதிக தொப்பை உள்ளவர்கள் செய்யக்கூடிய ஆதனம் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
ஆசன செய்முறை
முதலில் வச்சிராசனத்தில் அமா்ந்து கைகளைப் பின்னால் கொண்டுபோய், இடது கையால் வலது மணிக்கட்டை பிடித்துக்கொள்ளவும்.
பின்னர் மெதுவாக மூச்சை வெளியே விட்டுக்கொண்டே குனிந்து நெற்றியை முன்னால் கொண்டுசென்று அமர்ந்த படி 10 வினாடிகள் இருக்கவும்.
பின்னா் மூச்சை இழுத்துக்கொண்டே நிமிரவும். இதுபோல் இரண்டு அல்லது மூன்றுமுறை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் முதுகிலுள்ள தசைகளும், எலும்புகளும் வலுவடையும். மற்றும் கல்லீரல், மண்ணீரல் முதலியன அழுத்தப்பட்டு நன்கு செயல்பட தொடங்கும்.
மேலும் மலச்சிக்கல், நீரிழிவு நோய் அகலம், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் குறையும். தொடர்ந்து நுரையீரல் தூய்மை அடைவதோடு தொப்பை குறைய மிகச்சிறந்த ஆசனமாக பார்க்கபடுகிறது.
