தேசிய பிரச்சினைக்கு ஜனாதிபதி ரணில் வாக்குறுதி!

0
409

தேசிய பிரச்சினைக்கு இன்னும் சில மாதங்களில் தீர்வு காணப்படும் என நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நேற்றையதினம் (14-09-2022) தெரிவித்துள்ளார்.

30 வருடகால யுத்தத்தை இலங்கை வெற்றியுடன் முடிவுக்குக் கொண்டுவந்ததுடன் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதக் குழுக்களால் இலங்கையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்த முடியும் எனவும், அவ்வாறான பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பது எதிர்காலத்தில் இலங்கை எதிர்கொள்ளும் பாரிய சவாலாகும்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டியை இலங்கை காண விரும்பவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்து சமுத்திரப் பிராந்தியத்தை அமைதியான பிரதேசமாகப் பார்க்க இலங்கை விரும்புவதாகவும் வலியுறுத்தினார்.

இந்தப் பிராந்தியத்தில் இலங்கை ஒருபோதும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையிலுள்ள அனைத்து துறைமுகங்களும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் வழங்கியுள்ள உறுதிமொழி! | President Ranil Wickremesinghe S Pledge

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடன் முகாமைத்துவ நடவடிக்கையாக மட்டுமே சீனாவின் பங்குகள் இருக்கின்றது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் உலகிற்கு திறந்து விடுவதன் மூலம் சக்தி வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி தேசிய பாதுகாப்பு அகாடமியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.