22 வருடமாக குளிக்காமல் இருந்து சாதனை செய்த இந்திய மனிதன்!

0
439

இந்தியாவின் பீகாரைச் சேர்ந்த தரம்தேவ் ராம் என்பவர் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மஞ்சா கருப்பு பைகுந்த்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இவர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நிலத் தகராறுகள், அப்பாவி விலங்குகள் கொல்லப்படுவது போன்ற பிரச்சனைகள் முற்றிலும் நிற்கும் வரை குளிக்கப் போவதில்லை என்கிற உறுதிமொழியை எடுத்துள்ளார்.

இது முற்றிலும் வினோதமான ஒன்றாக இருந்தாலும் மனித நேயத்தின் அடிப்படையில் இந்த பழக்கத்தைப் பின்பற்றி வருகிறார்.

தற்போது 40 வயதாகும் தரம்தேவ் 22 ஆண்டுகளுக்கு முன்பு குளிப்பதை நிறுத்திவிட்டு இன்றுவரை தனது உறுதிமொழியைத் தொடர்கிறார்.

அதே போன்று இவரது மகனும் மனைவியும் இறந்த பிறகும் ஒரு துளி நீரைக் கூட அவர் உடலைத் தொடவில்லை. அந்த அளவிற்கு இவரின் உறுதிமொழியைப் பிடிவாதமாக உள்ளார்.

இதில் பலருக்கும் உள்ள ஆச்சரியமாக விஷயம் என்னவென்றால், அவரின் உடலில் எந்த விதமான பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை. அதாவது அவருக்கு எந்த நோயும் வரவில்லை மற்றும் அவரது உடல் நன்றாக இருக்கிறது. இதுவும் மக்களுக்கு விநோதமாக உள்ளது.

இது குறித்து தரம்தேவ் ராம் அளித்த பேட்டியில்,

“1975 ஆம் ஆண்டில் நான் வங்காளத்தின் ஜக்தால் என்கிற இடத்தில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தேன். மேலும் 1978-இல் திருமணம் செய்து கொண்டு சாதாரண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன். ஆனால் 1987-இல் நிலத் தகராறுகள், விலங்குகள் கொல்லப்படுதல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதை நான் திடீரென்று உணர்ந்தேன்.

எனவே, இதற்கான பதிலைத் தேடி ஒரு குருவை அணுகினேன். அவர் என்னைத் தன் சீடனாகக் கொண்டு பக்தி மார்க்கத்தைப் பின்பற்றத் தூண்டினார். அப்போதியிருந்து நான் பக்தி மார்க்கத்தில் சென்று ராமனுக்காகத் தியானம் செய்ய ஆரம்பித்தேன் என்று விளக்கினார்.

இவர் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு 2000 ஆம் ஆண்டு வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் குடும்பத்தில் உள்ள நிதி சூழலின் அழுத்தத்தால் அவர் தொழிற்சாலைக்கு மீண்டும் வேலைக்குத் திரும்பினார். உணவு மற்றும் குளியல் ஆகியவற்றைத் துறக்க அவர் எடுத்த முடிவைத் தொழிற்சாலை மேலாளர் அறிந்ததும் அவரை பணிநீக்கம் செய்துள்ளார்.  

இதற்கிடையில், அவரது மனைவி மாயா தேவி 2003 இல் இறந்து விட்டார். அப்போது கூட அவர் குளிக்க மறுத்துவிட்டார். அவரது மகன்களில் ஒருவர் இறந்த பிறகும் தரம்தேவ் அசையாமல் அப்படியே இருந்துள்ளார்.

தரம்தேவின் மற்றுமொரு பிள்ளை ஜூலை 7, 2022 அன்று இறந்துள்ளார். அப்போதும் கூட அவர் குளிக்கவில்லை. இவரின் செயல் பலருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்த  நிலையில் தர்மதேவ் கூறியது உண்மை என உள்ளூர் வாசிகள் ஊர்ஜிதம் செய்ததாகவும் கூறப்படுகின்றது.