வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த திருவிழா; இன்று கொடியேற்றம்!

0
165

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு இன்று மாலை இடம்பெறவுள்ளது.

கொடியேற்ற நிகவானது உகந்தை மலை ஸ்ரீ முருகன் கோவில் கொடியேற்றமும் கோவில் பிரதமகுரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கொடியேற்றத்துடன் தொடர்ச்சியாக 15 நாட்கள் திருவிழாக்கள், பெரஹரா இடம்பெற்று எதிர்வரும் 12ஆம் திகதி கதிர்காமத்தில் தீர்த்த உற்சவமும் இடம்பெறவுள்ளது.

அதேபோன்று, உகந்தை முருகன் கோவிலின் தீர்த்த உற்சவம் எதிர்வரும் 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் கதிர்காமத்துக்கான காட்டுப்பாதையில் பயணிக்கும் பக்தர்கள் தொடர்ச்சியான மழையால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம  கந்தன் ஆலய  வருடாந்த பெருவிழா;  கொடியேற்றம் இன்று! | Kadirgamam Kandan Temple Annual Festival

அதேசமயம் யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோவிலில் இருந்து புறப்பட்ட குழுவினர் உள்ளிட்ட சுமார் 9 ஆயிரம் பாதயாத்திரை அடியார்கள் இதுவரை கதிர்காமத்தை சென்றடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.