இந்தியாவில் நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றிய 5 பேர் கைது!

0
382

இந்தியாவில் நீட் நுழைவு பரீட்சைக்குத் தோன்றிய மாணவிகளின் உள்ளாடைகளும் கழற்றப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் 3,500 மையங்களில் நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு நடைபெற்ற கல்லூரி ஒன்றில் தேர்வில் கலந்து கொண்ட மாணவிகளின் உள்ளாடைகளை களையச் செய்து பிறகு தேர்வு எழுத அனுமதித்ததாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைதானவர்கள் அனைவரும் பெண்களாவர். மாணவியொருவர் செய்துள்ள முறைப்பாட்டில்,

மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றிய   ஐவர் கைது! | Five Arrested Removing Underwear From Students

“பரீட்சைக்கு சென்ற என்னை அங்கிருந்தவர்கள் உள்ளாடை மற்றும் மேலாடையை கழற்ற கூறி சோதனை செய்தனர். என்னை போல பல மாணவிகளின் உள்ளாடைகளையும் கழற்றி சோதனை செய்தனர். கழற்றப்பட்ட உள்ளாடைகளை அங்குள்ள ஒரு அறையில் வைத்திருந்தனர் கூறியிருந்தார்.

சம்பவம் தொடர்பாக 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள கல்வித்துறை மந்திரி பிந்து, மத்திய கல்வித்துறை மந்திரி கடிதம் எழுதியிருந்த நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுவை மத்திய கல்வித்துறை அமைத்துள்ளதாக கூறப்படுகின்றது.