நான்கு வாக்குகள் நிராகரிப்பு

0
125

இடைக்கால ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் வாக்குகள் கணக்கிடப்பட்டன.

இந்நிலையில், வாக்களித்த 223 பேரில் நால்வரின் வாக்குகள் தவறான முறையில் வாக்களித்த காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

செல்லுப்படியான வாக்குச்சீட்டுகள் ஒரு பெட்டிக்குள்ளும் செல்லுப்படியற்ற வாக்குச்சீட்டுகள் மற்றொரு பெட்டிக்குள்ளும் போடப்பட்டன. அதில், நண்பகல் 12 மணிவரையிலும் ஒரு வாக்குச்சீட்டு செல்லுப்படியற்ற வாக்குச் சீட்டு பெட்டிக்குள் ஒதுக்கப்பட்டது.

வாக்குகளை எண்ணும் செயற்பாடுகளை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஹரின் பெர்ணான்டோவும், டலஸ் அழகபெரும சார்பில் டிலான் பெர்ணான்டோவும். அனுரகுமார திஸாநாயக்க சார்பில், வி​ஜித ஹேரத்தும் கண்காணித்தனர்.