காலி போராட்டக் களத்தில் ஒலிக்கும் பிரபாகரனிசம்… மனோ முகநூல் பதிவு!

0
318

கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் தற்போது சிங்கள மக்களிடையே பிரபாகரன் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் பயங்கரவாதியாக கூறப்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக போராடும் போராட்டகாரர்களின் மனநிலை பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வெளியிட்ட முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதவில் குறிப்பிடப்பட்டிருந்தவை,

சிங்கள அரசியல் “அரகல” தம்பி ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.”புலிகளின் தலைவர் பிரபா ஓடி தப்பவில்லை. களத்தில் வந்ததை எதிர்கொண்டார். எங்க ஜனாதிபதி கோதா ஓடி ஒதுங்க இடம் தேடி ஊர்ஊராக அலைகிறார்.

“மல்லி, இரண்டையும் ஒப்பிட தேவையில்லை.” “பிரபா, எதற்காக போரிட ஆரம்பித்தார் என்பதை தேடி அறியுங்கள். அதற்கு உங்கள் புதிய “சிஸ்டத்தில்” தீர்வு தேடுங்கள். பார்க்கத்தானே போகிறேன்..!” என்றேன்.

வேறு என்ன சொல்வது? இவர்கள் நினைத்தால் திட்டி தீர்ப்பார்கள். அப்புறம் விரக்தியில் இப்படியும் சொல்வார்கள். நமக்கு இதெல்லாம் பழகி போச்சு..! என பதிவிட்டுள்ளார்.