உலக சாதனையாக உருவெடுத்துள்ள அயர்லாந்து தீ உற்சவம்!

0
762

அயர்லாந்தில் ஆண்டு தோறும் நடைபெறும் தீ உற்சவ விழாவானது நடப்பாண்டில் புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறது.

ஆண்டு தோறும் ஜூலை 12 ஆம் திகதியன்று அயர்லாந்தில் பான்பைர் (bonfire) எனப்படும் தீ உற்சவ விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

இந்த தீ உற்சவ விழாவும் கொண்டாடப்படுகிறது. ஊரின் குறிப்பிட்ட இடத்தில் மரக்கட்டைகள் உயரமாக அடுக்கப்படுகின்றன. இரவில் அதற்கு தீ வைத்து எரிக்கப்படுவதோடு விழா நிறைவடைகிறது.

இந்த விழாவில் ஒரு சாதனை செய்ய முடிவெடுத்த பெல்பாஸ்ட் நகரத்தினர் தீ வைப்பதற்காக கட்டமைக்கும் கோபுரம் போன்ற அமைப்பை மிக உயரமாகச் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

அவர்களின் இந்த முயற்சி உலக சாதனையாகவே மாறியது. அதன்படி அமைக்கபட்ட 202 அடி உயரமான பிரமாண்டமான கோபுர அமைப்பு காண்போரை வியக்க வைத்தது.

அதேவேளை அயர்லாந்தில் 1690 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரின் நினைவாகவே இந்த தீ உற்சவ விழா கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.