நித்யானந்தாவிடம் கோட்டாபய மறைந்திருக்கிறாரா? எம்.பி கஜேந்திரன்

0
577

இலங்கையை விட்டு தப்பிச் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa), நித்தியானந்த சுவாமிகளிடம் சென்றிருக்கலாம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்  (Selvarajah Kajendren) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எங்களைப் பொறுத்த வரையில் கோட்டாபய ஒரு கொடுமையான மனிதர். ஹிட்லருக்கு பின்னர், கருணை, ஈவிரக்கம் இல்லாத மனிதர் அவர். அவர் ஒரு கருணைக் கொடூரன் என்ற எண்ணம் தான் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.

கோட்டாபய பதுங்கியிருக்கும் இடம் இதுவா? எம்.பி ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Gotabaya Hiding Place S Kajendren Nithyananda

இறுதிப் போரிலே வன்னி மீது பொருளாதார தடைகள் விதித்து பெண்கள், குழந்தைகள், கரிப்பிணிகள் என பலரை அவர் கொன்று குவித்துள்ளார்.

மக்களை எவ்வாறு கொன்றார் என்பதை வலிகளை அனுபவித்த எமக்குத் தான் தெரியும். இவர்களை துக்கு மேடைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் எமது கோரிக்கை.

கோட்டாபய பதுங்கியிருக்கும் இடம் இதுவா? எம்.பி ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Gotabaya Hiding Place S Kajendren Nithyananda

இந்த நிலையிலே அவரை தெரிவு செய்த சிங்கள மக்களே இப்போது விரட்டி அடித்துள்ளனர்.

அவர் கடலால் சென்றாரா, விமானத்தில் சென்றாரா என்பது எமக்குத் தெரியாது.

ஆனால் சிலர் சொல்கிறார்கள் அவர் கைலாசாவில், நித்தியானந்தவிடம் சென்றுள்ளார் என்று, தமிழ் மக்களின் உயிர்த் தியாகங்கள் அவர்களை உய்ய விடாது என்றார்.