கணவரின் மரணத்திற்கு பழிவாங்க களமிறங்கிய ரஷ்ய விதவை!

0
264

ரஷ்ய இராணுவ வீரரான தனது கணவனைக் கொன்ற புடினின் (Putin) படையை பழிவாங்கிய தீருவேன் என விதவைப் பெண் ஒருவர் உக்ரைனுக்கு ஆதரவாக போர்க்களத்தில் இறங்கியுள்ளார்.

உக்ரைனில் தனது படைகளை போருக்கு வழிநடத்த மறுத்ததால் ரஷ்யாவின் செச்சென் படைகளால் (Chechen forces) தூக்கிலிடப்பட்ட ஒரு ரஷ்ய சார்ஜென்ட்டின் விதவை மனைவி ரஷ்யாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

அதனால், உக்ரைனுக்காக தங்கள் நாட்டு மக்களுக்கு எதிராகவே போராடும் அதிருப்தியடைந்த ரஷ்யர்களின் படையான ஃப்ரீடம் ஃபார் ரஷ்யா லெஜியன்-ல் சேர்ந்துள்ளார்.

புடினின்(Putin) உக்ரைன் படையெடுப்பிற்கு மத்தியில் பக்கம் மாறிய பெரும்பாலான ரஷ்ய மற்றும் பெலாரசியர்களைக் கொண்ட போராளிகளின் குழுவே ஃப்ரீடம் ஃபார் ரஷ்யா லெஜியன் ஆகும்.

தனது அடையாளத்தை மறைத்துக்கொண்ட அப்பெண், ஃப்ரீடம் ஃபார் ரஷ்யா லெஜியன் பகிர்ந்த வீடியோ காட்சிகளில் தோன்றினார். அந்த வீடியோவில் புடின் எதிர்ப்புப் படையான ஃப்ரீடம் ஃபார் ரஷ்யா லெஜியனின் நீலம் மற்றும் வெள்ளைக் கொடியின் முன் அமர்ந்து, “நாம் அனைவரும் ஒன்றாகப் போரை நிறுத்தி ரஷ்யாவுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டு வர வேண்டும்.

புடின்(Putin) ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும். கொடுங்கோலனைப் பொறுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். எங்கள் படையணியில் சேருங்கள்” என்று அவர் தனது சக நாட்டு மக்களிடமும் பெண்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஃப்ரீடம் ஃபார் ரஷ்யா லெஜியன் குழுவின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் உக்ரைனுக்குள் நுழைந்தது மார்ச் மாதம் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.