அவுஸ்திரேலியா சென்ற இலங்கை கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!

0
215

இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்கிரமவுக்கு (Praveen Jayawickrama) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பிரவீன் ஜயவிக்கிரம 05 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த நிலை! | Sri Lankan Cricketer Australia Infected Covid