பிரான்ஸில் காதல் வலையில் விழ வைத்து ஏமாற்றும் புதிய மோசடி!

0
235

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக இளைஞர் யுவதிகளை காதல் வலையில் விழ வைத்து ஏமாற்றும் புதிய மோசடி ஒன்று இடம்பெற்று வருகின்றது.

சமூக வலைத்தளம் ஊடாக நண்பர்களாகி அல்லது தவறிய அழைப்புகள் ஊடாக நண்பர்களாகி காதல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதாக தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் அவர்களை ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இந்த வகையான மோசடி அதிகரித்து பிரான்ஸில் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

பிரான்ஸில் காதல் வலையில் விழ வைத்து ஏமாற்றும் புதிய மோசடி! | New Scam To Fall In Love Trap In France

ஒவ்வொரு வாரமும் இளைஞர் யுவதிகளிடம் இருந்து இவ்வாறான முறைப்பாடுகள் கிடைப்பதாக பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முதலில் நண்பர்களாக அறிமுகமாகும் பெண்கள் அல்லது ஆண்கள் எதிர் தரப்பினருடன் மிகவும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.

அவ்வாறு தொடர்பு ஏற்படுத்திக் கொள்பவர்கள் நேரில் சந்தித்துக் கொள்வதற்கு விருப்பம் தெரிவிப்பதில்லை. அதன் பின்னர் தாம் தங்கள் எதிர்காலத்திற்காக தொழில் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கு 1000 முதல் 5000 யூரோ வரை வழங்குமாறு உதவி கேட்பதாகும் தெரியவந்துள்ளது.

தாம் காதலிப்பவர் முன்னெறுவதற்காகவே கேட்கின்றார் அவரது நலனுக்காக வழங்குவோம் என கூறி உதவுவதாக தெரியவந்துள்ளது. உதவி பெற்ற பின்னர் அந்த நபரின் இலக்கத்திற்கு தொடர்புக் கொள்ள முடியாது. அதன் பின்னர் அது துண்டிக்கப்பட்டு விடும் என குறிப்பிடப்படுகின்றது.

இதனால் அவதானமாக இருக்குமாறும் இவ்வாறான முறையில் தொடர்புக் கொள்பவர்களிடம் காதல் தொடர்புகளை ஏற்படுத்திக கொள்ள வேண்டாம் என இளைஞர் யுவதிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.