400 கோடி வசூலை நெருங்கிய விக்ரம்

0
186

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான  ‘விக்ரம்’ படம் பாக்ஸ் ஆபீஸில் 400 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவான ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமான ஓடிவருகின்றது.

‘கைதி’ படத்தின் சில காட்சிகளும், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், சந்தான பாரதி, சூர்யா ஆகியோரின் மிரட்டல் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்ததால் படக்குழு எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்று வசூலில் புதிய சாதனையை விக்ரம் படம் படைத்து வருகிறது.

வருகிற ஜூலை 8-ம் திகதி ஓடிடியில் இந்தப் படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோலிவுட் பாக்ஸ் ஆபீஸில் ‘விக்ரம்’ திரைப்படம் இரண்டாம் இடைத்தை பிடித்துள்ளது.

390.50 கோடி ரூபாய் இதுவரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் விக்ரம் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் இந்த வசூலை எட்டிய சில திரைப்படங்கள் பட்டியல் இதே :

  • 2.0 – ரூ. 664.70 கோடி
  • விக்ரம் – ரூ. 390.50 கோடி (20 நாட்கள்)
  • பிகில் – ரூ. 298.40 கோடி
  • எந்திரன் – ரூ. 288 கோடி
  • கபாலி – ரூ. 285.20 கோடி