வியாளேந்திரனின் வீட்டுக்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞருக்கு அஞ்சலி

0
360

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டு ஒரு வருடம் நிறைவுபெற்றுள்ள நிலையில் ஆண்டவன் தனது மகனை கொலை செய்தவனை காட்டிக்கொடுத்துள்ளதாக கொலை செய்யப்பட்ட  இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பாலசுந்தரம் என்னும் இளைஞன் 2021.06.22 அன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரனின் மெய்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தபோதிலும் இதுவரையில் எந்தவித நீதிவிசாரணையும் இன்றி வழக்குகள் முன்கொண்டு செல்லப்படும் நிலையில் இந்த இளைஞனின் படுகொலை தொடர்பில் குற்றச்சாட்டுகளை பெற்றோர் தொடர்ச்சியாக முன்வைத்துவருகின்றனர்.

தனது மகனுக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோரரான மயூரன் என்பவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தனது மகன் படுகொலை செய்யப்பட்டதான குற்றசாட்டுகளை பெற்றோர் முன்வைத்துவந்தனர்.

"வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் கொலை செய்தவன் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளார்" (VIDEO)

இந்த நிலையில் இன்றைய தினம் படுகொலைசெய்யப்பட்ட பாலசுந்திரத்தின் ஓராண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் நேற்று மாலை இந்த படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக கொல்லப்பட்டவரின் பெற்றோரால் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரனின் சகோதரனான சதாசிவம் மயூரன் நேற்று இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில் தமது மகன் படுகொலைசெய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதற்கு முன் தமது மகனை கொலை செய்தவர்கள் வெளிக்காட்டப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும், நேற்று மாலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரனின் வீட்டிற்க்கு முன்பாக பாலசுந்தரத்தின் உருவப்படம் வைக்கப்பட்டு சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வீதியில் கிடந்து அழுது தமது கவலைகளையும் பெற்றோர் வெளிப்படுத்தினார்கள்.    

"வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் கொலை செய்தவன் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளார்" (VIDEO)