தடைகளை தகர்த்தெறிந்து பாராளுமன்றத்திற்குள் நுழையும் தம்மிக பெரேரா!

0
134

பிரபல தொழிலதிபரான தம்மிக பெரேராவை (Dhammika Perera) எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 5 அடிப்படை உரிமை மனுக்களையும் உயர்நீதிமன்றம் நேற்றைய தினம் (21-06-2022) தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக பெசில் ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து வெற்றிடமாகியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு தம்மிக்க பெரேரா பெயரிடப்பட்டார்.

இந்த நிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபேரணை மனுவும் நான்கு அடிப்படை உரிமை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும் வரையில் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ சத்தியப்பிரமாணம் செய்யப் போவதில்லை என வர்த்தகர் தம்மிக்க பெரேரா நேற்று முன்தினம் (20-06-2022) உயர் நீதிமன்றில் உறுதிமொழியளித்தார்.

தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை நேற்றைய தினம் (21-06-2022) உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அதேவேளை நாளை தம்பிக்க பெரேரா நாடாளுமன்றிற்கு வருகை தருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.