முடங்கியது இலங்கையின் சீகிரிய சுற்றுலாத்தலம்!

0
516

இலங்கைக்கு டொலர் வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் பிரதான தொழிலாக சுற்றுலாத்துறை இருந்து வருகிறது.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, மின் துண்டிப்பு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் ஏனைய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய தொழில் துறைகளில் ஈடுபட்டிருந்த மக்கள் பெரும் நட்டத்தை எதிர் கொண்டுள்ளனர். குறிப்பாக சீகிரிய குன்று அமைந்துள்ள சுற்றுலாப் பகுதியில் தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

முடங்கியது இலங்கையின் முக்கிய சுற்றுலாத்தலம் !

யானை சவாரி, ஜீப் வண்டி சவாரி, மாட்டு வண்டி மற்றும் ஏனைய போக்குவரத்து சாதனங்களில் சீகிரியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பல நாட்கள் சீகிரியாவில் தங்கிருப்பார்கள் என சுற்றுலாத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள சீகிரிய பிரதேசத்தை சேர்ந்த பலர் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது குறைந்தளவில் சுற்றுலாப் பயணிகள் வந்தாலும் நாட்டில் நிலவும் கஷ்டமான சூழ்நிலையில் அவர்கள் திரும்பி சென்று விடுவதனால் , தொழில் வாய்ப்புகள் குறைந்துள்ளதுடன் சுற்றுலா வர்த்தகங்களும் மூடப்பட்டுள்ளன.

எனினும் சில வர்த்தக நிலையங்கள் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்து திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை நாட்டில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தமைக்கு அரசாங்கம் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும் என சுற்றுலா வழிக்காட்டிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முடங்கியது இலங்கையின் முக்கிய சுற்றுலாத்தலம் !

மேலும் அரசாங்கம் சுற்றுலாத் தொழிற்துறைக்கு முன்னுரிமை வழங்கிய செயற்பட்டிருந்தால் சுற்றுலாத் தொழிற்துறை இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்காது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.