இந்தோனேசியாவில் விசித்திரமான நேர்த்திக்கடன்!

0
529

இந்தோனேஷியாவில், புகைந்து கொண்டிருக்கும் புரோமோ எரிமலைக்குள் கால்நடைகள், காய்கனிகளை வீசி பழங்குடி மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிழக்கு ஜாவா-வில் உள்ள புரோமோ மலைப்பகுதிகளில் வசிக்கும் டெங்கர் பழங்குடி மக்கள் தாங்கள் வழிபடும் தெய்வங்களை மகிழ்விக்க சுமார் 600 ஆண்டுகளாக இந்த சடங்கை கடைபிடித்து வருகின்றனர்.

இதன்போது அவர்கள் வீசி எறியும் ஆடுகள், கோழிகள், பழங்களை பிற சமூக மக்கள் மலை உச்சியில் நின்றபடி வலைகளை வீசி பிடித்து சென்றனர்.