பதவியைத் தூக்கியெறிந்தார் வேலு யோகராஜ்

0
722

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் பதவியிலிருந்து தான் இன்று (15) முதல் விலகியுள்ளதாக வேலு யோகராஜ் உத்தியோகபூர்வமான சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

எனினும், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் தொடர்ந்தும் தாம் நீடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமது பதவி விலகலுக்கான காரணத்தை ஊடக சந்திப்பின் போது விளக்கமளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட கந்தபளை, கொங்கோடியா தோட்டத்தின் 80 பேர்ச் (0.2ஹெக்டேயர்கள்) காணி நுவரெலியா பிரதேச சபைக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்தது.

காணி முறைகேடு

குறித்த காணி சபை தலைவரால் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அது குறித்து இ.தொ.கா தலைமை காரியாலயத்தில் அனைத்து தரப்ப்பினராலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் முழுமையாக ஆராயப்பட்டு வருகின்றது.

அத்துடன் கந்தப்பளை காணி பிரச்சினை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மைத்தன்மையின் பிரதகாரம் பாரபட்சம் இன்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.