மீண்டும் பதவி வகிக்கப்போவதில்லை; ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

0
112

மீண்டுமொரு முறை மனித உரிமை ஆணையாளராக பதவி வகிக்கப்போவதில்லை என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் அம்மையார் அறிவித்துள்ளார்.

மனித உரிமை பேரவையின் ஐம்பதாவது அமர்வுடன் தனது பதவிக்காலம் முடிவிற்கு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் கூறுகையில்,

மனித உரிமை ஆணையாளர் என்ற பதவிக்காலம் முடிவிற்கு வருகின்றது. இந்த பேரவையின் ஐம்பதாவது அமர்வே (இந்த அமர்வு) நான் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம் குறித்து அறிக்கை வெளியிடும் உரையாற்றுவது இறுதி அமர்வாக காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்திற்கு நெருக்கமான சிலியின் முன்னாள் ஜனாதிபதி மிச்செலே பச்லெட் தொடர்ந்தும் மனித உரிமை ஆணையாளராக பதவி வகிக்கவேண்டும் என விரும்புவதாக சில இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.