பலாங்கொடை நிரப்பு நிலையத்தில் நீர் கலந்த மண்ணெண்ணெய் விற்பனை!

0
130

பலாங்கொடை தும்பகொட கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை நேற்று ஏற்பட்டது.

பலாங்கொடையில் இரண்டு மாதங்களின் பின்னர் நேற்று எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெறப்பட்ட மண்ணெண்ணெயில் தண்ணீரில் கலந்துள்ளமை தெரியவந்த்துள்ளது.

இதனையடுத்து  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தும்பகொட கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.