அமெரிக்காவின் தடைக்கு பின்… பொதுவெளியில் தோன்றிய புடினின் ரகசிய காதலி

0
465

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்த பின்னர் முதன்முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ரகசிய காதலி அலினா கபேவா.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவாவுக்கு விளாடிமிர் புடினுடன் ரகசிய குடும்பம் ஒன்று இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில், சோச்சி பகுதியில் அமைந்துள்ள கருங்கடல் ரிசார்ட் ஒன்றில் 28 சிறார்களுடன் ஜிம்னாஸ்டிக் பயிற்சி வகுப்பில் ஈடுபட்டு வந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.

தம்மீதான மேற்கத்திய நாடுகளின் தடை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்க மறுத்ததாகவே கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் அலினா கபேவா பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதன்முறை.

இரண்டாம் உலகபோரில் கொல்லப்பட்ட அடையாளம் காணப்படாத வீரர்களுக்கான கல்லறையில் அலினா கபேவா சிறார்களுடன் கடந்த ஏப்ரல் மாதம் அஞ்சலி செலுத்தியது ஊடகங்களில் வெளியானது.

அதன் பின்னர் தற்போது தான் அவர் பொதுவெளியில் தோன்றியுள்ளார். உக்ரைன் மீதான போரில் விளாடிமிர் புடின் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் நிலையில்,

உறுதியுடன் போராடுங்கள் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். உங்கள் இலக்கை சென்றடையுங்கள் என ரஷ்ய வீரர்களுக்கு அலினா கபேவா வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.