டுவிட்டரில் ஜனாதிபதி கோட்டாபய பாராட்டு!

0
157

இலங்கையில், 70 வீதம் என்ற அளவில் புதுப்பிக்கப்பட்ட மின்சார உற்பத்திகளை மேற்கொள்ளவேண்டும் என்று அடிப்படையில் முன்வைக்கப்பட்ட மின்சக்தி திருத்தச்சட்ட மூலம் நாடாளுமன்றில் நேற்று (09-06-2022) மாலை நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் சட்டமூலம் நிறைவேறியுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

9 ஆண்டுகளுக்குப் பிறகு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத்தை செயல்படுத்தும் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இது முதலீட்டாளர்களுக்கு புதிய வழிகளைத் திறக்கும் மற்றும் இலங்கையில் உள்ள மின் நெருக்கடிக்கு ஒரு நிலையான தீர்வை வழங்கும்.

பொறுப்புள்ள அமைச்சராக,  காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) முழு அர்ப்பணிப்பையும்  காட்டினார். உண்மையிலேயே பாராட்டுக்குரியது என அதில் குறிப்பிட்டுள்ளார்.