தூங்கிக்கொண்டிருந்த மாமியாரை போதையில் தாக்கிய மருமகன்

0
218

திருகோணமலை – மயிலவெவ பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை தாக்கிய மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான 52 வயதுடைய எஸ்.சுவர்ணலதா காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடிபோதையில் வீட்டிற்கு வந்த மருமகன் தூங்கிக் கொண்டிருந்த மாமியாரை அடித்து உதைத்துள்ளதும், குடும்ப தகராறு காரணமாக மாமியாரை வீட்டில் தனியாக இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் மாமனாரை தாக்கிய 33 வயதுடைய சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.