முல்லைத்தீவில் கஞ்சா கடத்திய கணவன் மனைவி கைது!

0
239

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஜயன் கட்டுப் பகுதியில் கஞ்சா கடத்திச் சென்ற கணவன் மனைவி இருவரையும் ஒட்டுசுட்டான் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளார்கள்.

ஒட்டுசுட்டான் தொட்டியடிப் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிஸார் உந்துருளியில் சென்ற கணவன் மனைவி இருவரையும் சோதனை செய்தனர்.

இதன்போது ஒரு கிலோ 360 கிராம் கேரள கஞ்சாவினை கடத்தி செல்ல முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்படி முத்துஜயன் கட்டினை சேர்த இருவரையும் கைது செய்துள்ளதுடன் அவர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.