மாலை 6.30க்கு பின்னர் மின்துண்டிக்கப்படமாட்டாது!

0
77

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதி மற்றும் பரீட்சை இடம்பெறும் தினங்களில் மாலை 6.30க்கு பின்னர் மின்துண்டிக்கப்படமாட்டாது என அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக அதிகளவு நீர் தேவை. தேவையான அளவு நீரை, நீர்முகாமைத்துவ செயலாளர் காரியாலயம் ஊடாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம் மீண்டும் தொழில்படுவதால் பரீட்சை காலத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.