யாழில் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் நிற்கும் மக்கள்!

0
69

யாழில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.  

இன்று (22-05-2022) அதிகாலை முதல் கொக்குவில், திருநெல்வேலி, கல்வியங்காடு, அச்சுவேலி உட்பட யாழில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காணப்படுகின்றனர். 

பரீட்சை கடமையில் ஈடுபடுவோர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனால் பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கினாலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காலை நேரத்தில் மூடப்பட்டே காணப்பட்டது.

அதேவேளை எரிபொருள் பவுஸர்கள் வருகை தந்தவுடன் மதியம் மற்றும் மாலை வேளைகளில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.