சாண்ட்விட்ஜ்களுக்காக பரிமாறப்பட்ட ஓவியம் 350,000 டொலருக்கு ஏல விற்பனை!

0
199

கனடாவின் நோவா ஸ்கோவிட்டியின் கிராமிய ஓவியர் மாவுட் லுயிஸின் ஓவியமொன்று அண்மையில் 350,000 டொலர்களுக்கு எலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

A Painting by Canadian Folk Artist Maud Lewis, Once Bartered for Grilled  Cheese Sandwiches, Is Due to Sell for Tens of Thousands at Auction | Artnet  News

இந்த ஓவியம் கடந்த 1970ம் ஆண்டில் சில சாண்ட்விட்ஜ்களுக்காக விற்பனை செய்யப்பட்ட ஓவியம் என்பது குறிப்பிடத்தக்கது.

பசி காரணமாக லுயிஸ் தனது ஓவியமொன்றை இவ்வாறு சாண்ட்விட்ஜ்களுக்காக பரிமாறிக் கொண்டுள்ளார்.

Painting traded for a cheese sandwich sold for $272,000 | Al Mayadeen  English

மிகவும் வறுமையில் வாழ்ந்த பெண் ஓவியரான லுயிஸ் தனது வாழ் முழுவதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தார் என்பதுடன் 1970 அவர் இயற்கை எய்தினார்.

லுயிஸ் தனது படைப்புக்களை வீதி ஓரத்தில் வைத்து விற்பனை செய்தார் எனவும் பெரும்பாலும் ஐந்து டொலர்கள் அளவிலேயே அவர் ஓவியங்களை விற்பனை செய்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

லுயிஸின் எண்ணெய் சித்திரமொன்று 70000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.