இலங்கையில் மிகப்பெரிய தீவை குத்தகைக்கு எடுத்த சுவிஸ்!

0
528

இலங்கையில் வடமேல் மாகாணத்தின் இரண்டாவது பெரிய தீவான உச்சிமுனை தீவு, சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றுக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.

1,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட உச்சமுனி தீவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரிசார்ட் ஒன்றை உருவாக்க சுவிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான காலக்கெடு நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் அதற்காக சுவிஸ் நிறுவனம் இலங்கைக்கு வந்தது. அந்நிறுவனத்தின் மொத்த ஆரம்ப முதலீடு 417 மில்லியன் டொலர்கள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில் உச்சிமுனைத் தீவை மேற்படி சுவிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சுற்றுலா சேவை வழிக்காட்டிகள் சங்கம் (ACTSPA) நேற்று குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ACTSPA உப தலைவர் பிரியந்த கருணாதிலகவிடம் கேள்வி எழுப்பிய விஜேசிங்க,

“இந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது ​​சுற்றுலாத் துறைக்கு மிகவும் பெறுமதியான சொத்தாக விளங்கும் உச்சிமுனைத் தீவை சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 2000-ல் தொடங்கப்பட்டது, 2019 இல் இதன் மதிப்பு 417 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டது.

சுற்றுலாத்துறைக்கு கேபினட் அமைச்சர் இல்லை, பொறுப்பேற்க யாரும் இல்லை, ஆனால் அதிகாரிகள் மிகவும் மதிப்புமிக்க சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்கின்றதாக சுட்டிக்காட்டினார். அதனை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்த அவர், இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக விற்று நாட்டை ஆளத் திட்டமிடுகிறார்களா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் “இந்த ஒப்பந்தம் என்னவென்று யாருக்கும் தெரியாது. தொழில்துறையைச் சேர்ந்த எவரும் இதில் ஈடுபடவில்லை. அந்த தீவில் சுமார் 200 பேர் வசிக்கின்றனர். மேலும் ஒரு பள்ளியும் உள்ளது.

உள்ளூர் டெவலப்பர்களிடம் கொடுங்கள். இவை நாம் நாட்டிற்கு டாலர்களை கொண்டு வர பயன்படுத்தக்கூடிய சொத்துக்கள். அவை ஏன் விற்கப்படுகின்றன? என்றும் அவர் காட்டமாக கூறினார். அதேசமயம் இந்த திட்ட முன்மொழிவில் தீவில் வாழும் மீனவ சமூகத்தினருக்கும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் உள்ளடங்கியுள்ளதாகவும் விஜேசிங்க தெரிவித்தார்.