தப்பியோட முயன்ற மகிந்த குடும்பத்திற்கு வந்த சோதனை!

0
1104

இலங்கையை விட்டு வெளியேறுவதற்காக மஹிந்த மற்றும் குடும்பத்தினர் தயாராக இருந்தனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் பயணிக்கவிருந்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட வேண்டியிருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

UL5001 என்ற விமானத்திலேயே அவர்கள் பயணிக்க தயாராகியிருந்த நிலையில் அந்த விமானம் இரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.