ரஷ்ய படையினரால் முற்றுகையிடப்பட்ட இரும்பு ஆலைக்குள் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்!

0
519

உக்ரைன் மரியுபோலில் ரஷ்ய படையினரால் முற்றுகையிடப்பட்ட அசோவ்ஸ்டல் இரும்புத் தொழிற்சாலைகளில் இருந்து முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவும், உக்ரைனும் இதனை உறுதிச்செய்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஒரு வாரத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

வெளியேற்றப்பட்ட மக்கள்; எங்கிருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை,

எனினும் உக்ரைனிய துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக், மனிதாபிமான நடவடிக்கை முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி ஆலையில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டதாக கூறினார்,

இருப்பினும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், மூன்று நாட்களில் 51 பேர் வெளியேற்றப்பட்டதாகக் கூறியுள்ளது.

இந்தநிலையில் ஆலைக்குள் இருக்கும் ஆயிரத்துக்கும் அதிகமான உக்ரைனிய இராணுவ வீரர்களை வெளியேற்றுவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்