சட்டவிரோதமான இரசாயன வாயுவை பயன்படுத்தும் அரசாங்கம்!

0
56

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க இரசாயன வாயுவை பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

மிகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவலுக்கமைய இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிடும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது குறித்த இரசாயன வாயு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், தரமான கண்ணீர் புகையை கொண்டுவருவதற்கு பணமில்லாமையால் அவை பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான இரசாயன வாயுக்களின் பாவனையால் கண்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், கண்ணீர் புகை தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வீதியின் நடுவே மயங்கி விழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச சட்டத்தின் கீழ் அவற்றைப் பயன்படுத்த முடியாது எனவும் அவை முற்றிலும் சட்டவிரோதமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.