பிரேத பரிசோதனைக் கூடத்தில் உயிருடன் எழுந்த முதியவர்!!

0
376

சீனா மருத்துவமனையில் முதியவர் ஒருவர் பிரேத பரிசோதனை கூடத்தில் உயிருடன் எழுந்தமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷாங்காய் நகரில் புட்டுவோ மாவட்டத்தில் உள்ள முதியோருக்கான மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்து விட்டார் என தவறுதலாக கூறப்பட்டு உள்ளது.

இதனையடுத்து அவரை பிரேத பரிசோதனை கூடத்திற்கு எடுத்து சென்றபோது அவர் உயிருடன் இருந்துள்ளார். அவரது உடல் பாகங்கள் அசைந்துள்ளதனால், பரிசோதனை கூடத்தில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்பின்னர் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சீரானதாக உள்ளூர் அரசு நிர்வாகமும் உறுதி செய்தது.

மேலும் இந்த சம்பவத்தில், 5 மாவட்ட அதிகாரிகள் மற்றும் முதியோர் மருத்துவமனையின் தலைவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேவேளை சம்பவம் தொடர்பில் அறிந்த ஷாங்காய் நகரவாசிகள் ஆத்திரமடைந்து, கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கொரோனாவால் சீனாவில் கடும் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், , பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க கூடிய சூழல் காணப்படுகிறது.

அத்தியாவசிய மருத்துவ சேவையை கூட பெற முடியவில்லை என மக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.