இலங்கைக்கு மீண்டும் கடனுதவி வழங்கிய இந்தியா!

0
129

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடி எதிர்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு இந்தியா தொடர்ந்து உதவி வழங்கி வருகின்றது. 

இதேவேளை,  இலங்கை எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்வதற்காக கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தனது கடன் வரம்பை மேலும் நீட்டித்து 200 மில்லியன் டாலரை தற்போது இந்தியா வழங்கி இருக்கிறது. இலங்கையின் எரிபொருள் தேவையை எதிர்கொள்வதற்கு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இலங்கை எரிசக்தித்துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா (Kanchana Wijesekera) செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்தியா கூடுதலாக 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.15 ஆயிரம் கோடி) வழங்கியிருக்கிறது. இதை 4 தொகுப்பு இறக்குமதிக்காக பயன்படுத்தப்படும்.

இதைத்தவிர மேலும் 500 மில்லியன் டாலர் கடனுதவி பெறுவதற்காக பேசிக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.