ஆட்டத்தை ஆரம்பித்த ரஷ்யா ; அச்சத்தில் ஜேர்மனி

0
120

தனது பேச்சைக்கேட்காத பல்கேரியா மற்றும் போலந்து நாடுகளுக்கு எரிவாயு வழங்கலை ரஷ்யா திடீரென நிறுத்தி தனது பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்த போரை அடுத்து பல நாடுகள் அதன் மீது தடைகள் விதித்த நிலையில் சில நாடுகள் ரஷ்யா மீது தடை விதிப்பதற்கு தயக்கம்காட்டி வந்தன.

ஏனெனில் , பல நாடுகள் இன்னமும் எரிவாயு மற்றும் எண்ணெய்க்காக ரஷ்யாவைத்தான் நம்பி உள்ளன. இந்நிலையில் திடீரென , பல்கேரியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு எரிவாயு வழங்குவதை திடீரென நிறுத்தி , தனது பழிவாங்கும் படலத்தைத் துவக்கியுள்ளது ரஷ்யா.

எனினும் , தாங்கள் எரிவாயுக்கான கட்டணத்தை ரூபிள்களில்தான் வழங்கவேண்டும் என விதித்த நிபந்தனைக்கு உடன்படாததாலேயே அந்நாடுகளுக்கு எரிவாயு வழங்குவதை நிறுத்தியுள்ளதாக புடினுடைய செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov தெரிவித்துள்ளார்.

தங்கள் மற்ற ஐரோப்பிய வாடிக்கையாளர்களும் ரூபிள்களில் கட்டணம் செலுத்தத் தவறினால், அவர்களுக்கு வழங்கப்படும் எரிவாயு விநியோகமும் நிறுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இவ்வாறான நிலையில்தான், இவ்வளவு நாட்களாக ரஷ்யாவை வெளிப்படையாக எதிர்க்கத் தயங்கிவந்த ஜேர்மனிதற்போதுதான் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க சம்மதித்துள்ளது.

இந்நிலையில் , பல்கேரியா மற்றும் போலந்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக தங்களுக்கு எரிவாயு வழங்குவதையும் ரஷ்யா நிறுத்தலாம் என்ற அச்சம் ஜேர்மனி க்கு ஏற்படுத்திள்ளது.