பதவி விலகுவது தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!

0
148

தானும், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் பதவி விலகுவது நடைமுறைசாத்தியமானது இல்லை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச , பொறுமையாக இருக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.அதில் அவர் தெரிவித்த முக்கிய விடங்கள் வருமாறு,

இந்த நாட்டு மக்களுக்காக என்ன செய்தோம் என்பதை மறந்து விடுவதுதான் மனித இயல்பு. நாம் பாதுகாத்து அவர்களுக்கு கொடுத்த ஜனநாயகத்தின் காரணமாக அவர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார்கள்.

“எங்களுக்கு ஒரு ஆணை கிடைத்துள்ளது, மக்கள் எங்களை மாற்ற விரும்பினால், அவர்கள் அதை தேர்தலின் மூலம் செய்யலாம்” நாங்கள் மக்களின் தேர்வு என்பதால் ஆணையின் மூலம் உள்ளே வந்தோம். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். நாங்கள் மக்களிடமிருந்து வந்தவர்கள். நாம் மக்களுடன் இருக்கும்போது, ​​எங்களிடம் நம்பிக்கையும் இருக்கிறது, அதற்கேற்ப செயற்படுவோம்.

மக்கள் எங்களை விரும்புவதால் நாங்கள் இங்கு இருக்கிறோம். மக்கள் விரும்பும் நாளில் நாங்கள் செல்வோம். 2015ல் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தோம். பின்னர் 2019 இல் நாங்கள் திரும்பி வந்தோம். எனவே பெரும்பான்மையானவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.