மலசலக் கூடத்திற்கு சென்ற யுவதியின் கதி

0
151

இலங்கையில் வைத்தியசாலை ஒன்றின் மலசலக் கூடத்திற்குச் சென்ற யுவதியொருவர் எதிர்பாராத சம்பவம் ஒன்றிற்கு முகம் கொடுத்துள்ளார். 

கேகாலை, வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிலுள்ள வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த யுவதியை கைத்தொலைபேசி மூலம் வீடியோவில் பதிவு செய்த இளைஞன், கேகாலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.    

கேகாலை,  அம்பன்பிட்டிய  பகுதியைச்  சேர்ந்த 24 வயதான, திருமணமான இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  

ரம்புக்கனை பிரதேசத்திலுள்ள அரச நிறுவனமொன்றில் உயர் பதவி வகிக்கும் 30 வயதான யுவதி ஒருவர் தனது தாயுடன், வைத்திய சான்றிதழொன்றை  பெற்றுக்கொள்வதற்காக வைத்தியசாலைக்கு வந்தபோதே இந்தச் சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.   

பெண்கள் மலசலக்கூடத்திற்கு யுவதி செல்வதை அவதானிக்க இந்த  இளைஞன், அடுத்துள்ள ஆண்கள் மலசல கூடத்திற்குச் சென்று, கதவை மூடிக்கொண்டு, பெண்கள் மலசலகூடம் சென்ற யுவதியை மலசலகூடத்தின்  இடைவெளியூடாக கைத்தொலைபேசி மூலம் வீடியோவில் பதிவு செய்துள்ளார். 

மேலே கைத்தொலைபேசி இருப்பதை யுவதி கண்டுள்ளார். வெளியே வந்து,  இளைஞனை மடக்கிப்பிடித்து வைத்தியசாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.