அரச தலைவருக்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் பெரும் அவமானம்! முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு

0
349

‘கோ ஹோம் கோட்டா’ என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்களின் போராட்டங்கள் வலுவடைந்துள்ளன.

இது அரச தலைவருக்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் சர்வதேச அரங்கில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Bandaranaike Kumaratunga) தெரிவித்துள்ளார்.

இதைப் பொறுக்க முடியாத கோட்டாபய அரசு, மக்களை வன்முறைக்கு இழுத்து அவர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை துப்பாக்கி முனையில் அடக்க முயலும்.

எனவே, மக்கள் வன்முறையில் இறங்காமல் அமைதியாக – ஜனநாயக வழியில் தொடர்ந்து போராட வேண்டும். கொலைகாரக் கோட்டாபயவை வீட்டுக்கு விரட்டும் வரை மக்கள் ஓயாமல் போராட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் 66 ஆவது பிறந்தநாள் நினைவு தினத்தையொட்டி கொழும்பில் நேற்று(21) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.