இலங்கைக்கு மேலும் பல மில்லியன் டொலர் கடனுதவி வழங்க முன்வரும் இந்தியா

0
602

இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை இந்தியா வழங்க உள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தை சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு கடனுதவி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பங்களாதேஷிடம் பெற்றுக்கொண்ட 450 மில்லியன் டொலர் கடனை மீளச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை பங்களாதேஷ் நீடித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைக்கப் பெறுவதற்கு ஆறு மாத காலம் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுவரையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்த கடன் உதவிகளை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.