பிரான்ஸ் வீதிகளில் யூரோ தாள்கள்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
443

பிரான்ஸில் வீதிகளில் யூரோ நாணயங்கள் இருந்தால் அதனை எடுக்க வேண்டாம் என பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாகனங்களை கொள்ளையடிக்கும் கும்பலினால் இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த 50யூரோ பணத்தை எடுக்க சென்றால் அது உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக பிரான்ஸின் பல பகுதிகளில் இந்த நடவடிக்கை இடம்பெற்று வருதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு வாகனங்கள் பயணிக்கும் வீதியில் சாரதிக்கு தெரியும் வகையில் 50 யூரோ நாணய தாள்களை மறைந்திருக்கும் நபர்கள் வைத்து செல்லும் நிலையில், அதனை அவதானிக்கும் சாரதி கதவை திறந்து அதனை எடுக்க செல்லும் போதும் சாவியை வாகனத்திலேயே விட்டு சென்ற விடுவதாக தெரியவந்துள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் மறைந்திருக்கும் நபர் வாகனத்திற்குள் நுழைந்து வாகனத்தை களவாடி செல்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு மர்ம நபர்கள் முன்னால் நிற்கும் உரிமையாளரையும் மோதிவிட்டு சென்று விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பல சாரதிகள் விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதேசமயம் மோசடியாளர்களால் வீதியில் வைக்கப்படும் 50 யூரோவும் போலியான நாணயத்தாள்கள் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனவே வீதியில் பணத்தை கண்டால் அதனை எடுக்க முயற்சிக்காமல் அவ்விடத்தை விட்டு சென்று விடுமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.