பிரான்சில் அதிகரித்து வரும் ஒரு மோசடிகள்! தொடரும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

0
450

பிரான்சில் காசோலை (செக்) மோசடிகள் அதிகரித்து வருகின்றன…

2020ஆம் ஆண்டில் சுமார் 538 மில்லியன் யூரோக்கள் அளவுக்கு பிரான்சில் காசோலை மோசடி நடைபெற்றுள்ளதாக பாதுகாப்பு ஏஜன்சி ஒன்றின் வருடாந்திர அறிக்கை தெரிவிக்கிறது.

காசோலை மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி?

பிரான்ஸ் மத்திய வங்கி இந்த மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் கண்காணிப்பை வலுப்படுத்துமாறு வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது.

கீழ்க்கண்ட விதங்களில் அவற்றைச் செய்யலாம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது:  

  • தொலைந்த மற்றும் திருடப்பட்ட காசோலைகளுக்கெதிராக எடுக்கும் முயற்சிகளை மேம்படுத்துதல்.
  • காசோலைப் புத்தகம் வழங்கப்படும்போது பாதுகாப்பை வலுப்படுத்துதல்.
  • காசோலை வழங்கல் நடவடிக்கைகளை நிறுத்தும் முறையின் தரத்தை அதிகரித்தல்.
  • காசோலைகளின் உண்மைத்தன்மையை சோதிப்பதற்கான கருவிகளை அதிக அளவில் பகிர்ந்துகொள்ளுதல்.

காசோலை பாதுகாப்பை தனிநபர்கள் அதிகரிப்பது எப்படி?

காசோலை மோசடிகளைத் தவிர்ப்பதற்கு வங்கிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு தபாலில் காசோலை அனுப்பும்போது, அவர்களுக்கு அது குறித்து முன் கூட்டியே தகவல் அளித்தல், காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மீது மறு பக்கம் உள்ளவை தெளிவாகத் தெரியும் வகையிலான (transparent) பிளாஸ்டிக் டேப் ஒட்டுதல் முதலான சில ஆலோசனைகள் காசோலை கையாளும் தனிநபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

காசோலை தொலைவது அல்லது திருட்டுப் போவதைத் தவிர்ப்பது எப்படி?

அவசியமில்லாமல் யாரிடமும் காசோலைப் புத்தகங்களை கடன் கொடுக்கவேண்டாம், குடும்ப உறுப்பினர்களிடம் கூட.