கருங்கடலில் வைத்துத் தாக்கி அழிக்கப்பட்ட ரஷ்ய போர்க்கப்பல்!

0
194

உக்ரைனின் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷ்யக் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்று உக்ரைன் ஆளுநர் மக்சிம் மார்சசென்கோ தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன்- ரஷ்யா போரின் ஆரம்பத்தில் உக்ரைனிய துருப்புக்களை சரணடையுமாறு ரஷ்ய படைகள் கோரிய போது அவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர்களை சிறைபிடிக்க வந்ததாகத் தெரிவிக்கப்படும் ரஷ்ய போர்க்கப்பல், உக்ரைனிய ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதில் இருந்து 510 பேரை மீட்பதற்கு ரஷ்யா முயற்சித்து வருவதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மொஸ்க்வா என்ற கப்பலில் இருந்து வெடிமருந்துகள் வெடித்து சிதறியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

மொஸ்க்வாவில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, அனைத்து பணியாளர்களும் முன்னதாகவே வெளியேற்றப்பட்டதாக ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் விளைவாகவே அதில் இருந்த வெடிமருந்துகள் வெடித்ததாக ரஷ்யா கூறியுள்ளது.

இதன்போது கப்பல் கடுமையாக சேதமடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள ரஷ்யா தீவிபத்துக்கான காரணத்தை இது வரை கூறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.