நடுக்கடலில் விழுந்த கடல்தொழிலார்கள்! மீட்பதில் ஏற்பட்ட சிக்கல்

0
167

 இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் முனியராஜ் என்பவர் தனுஷ்கோடி அருகே கடற்றொழிலில் ஈடுபட்ட போது கடலில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளார்

இச்சம்பவமானது நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டை கடற்கரையில் இருந்து 12 கடல் தொழிலாளர்கள் நாட்டுப்படகில் கடற்றொழிலில் ஈடுபட கடலுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது கடற்றொழிலாளர்கல் தனுஷ்கோடி அருகே தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அந்த படகில் இருந்த கடற்றொழிலாளர் முனியராஜ் கடலில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளார்.

நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான கடற்றொழிலாளரை தொடர்ந்து நேற்று (9) இரவு வரை சக கடற்றொழிலாளர்கள் தேடி வந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

இதனையடுத்து இன்று (10) காலை மீன்வளத்துறை அதிகாரிகள், மெரைன் பொலிஸ் மற்றும் இந்திய கடலோர காவல் படை அதிகாரி ஆகியோரிடம் கடலில் மாயமான கடற்றொழிலாளரை மீட்டுத்தர கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் இன்று (10) காலை முதல் தொடர் மழைக்கு மத்தியில் மீன் வளத்துறை, ராமேஸ்வரம் மெரைன் பொலிஸ், மற்றும் மண்டபம் கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து படகுகளின் உதவியுடன் தொடர்ந்து மாயமான நபரை நடுக்கடலில் தேடி வருகின்றனர்.

நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான கடற்றொழிலாளரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஹெலிகாப்டரை பயன்படுத்தி விரைவில் மீட்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.