ஆஸ்திரேலிய அதிபர் கார்ல் நெஹாமர் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி சந்திப்பு!

0
161

உக்ரைன் போருக்கு முடிவைக் காண மற்றும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது இதன்படி ஆஸ்திரேலிய அதிபர் கார்ல் நெஹாமர் நேற்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை சந்தித்துள்ளார்

இதன்போது ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் பேச்சுவார்த்தையை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஒஸ்திரிய அதிபர் இன்று ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளார்.

ஓஸ்ரிய அதிபர் முயற்சி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஒஸ்ரிய அதிகாரிகள், கலந்துரையாடலை மேம்படுத்தல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விடயங்களை அதிபர் நெஹாமெர் இரண்டு நாட்டு தலைவர்களுடன் ஆராய்வதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஸ்யா ஆரம்பித்த பின்னர், ரஸ்யாவுக்கு செல்லும் முதல் ஐரோப்பிய ஒன்றிய தலைவராக ஒஸ்ரிய அதிபர் கருதப்படுகிறார்.