நானும் சவேந்திர சில்வாவும் ஜனாதிபதியும் சாதாரண தரம் வரையே கற்றுள்ளோம்! நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா பகிரங்கம்

0
140

நாட்டை எப்போதும் பொறுப்பேற்கவேண்டுமானால் அதற்கு எதிர்கட்சி தயாராகவே இருக்கவேண்டும் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி எப்போதும் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை மாத்திரம் கூறிக் கொண்டிருக்கமுடியாது என்றும் அவர் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில் அரசாங்கத்தை எதிர்கட்சி பொறுப்பேற்கும்போது ஜனாதிபதி பதவியையும் சேர்த்தே அரசாங்கத்தை பொறுப்பேற்கமுடியும் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதற்கு பொருத்தமானவர் சஜித் பிரேமதாசவே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அண்மையில் நாடாளுமன்ற வளவில் சிறப்பு அதிரடிப்படையினரை காவல்துறையினர் நடத்திய விதம் தொடர்பில் கருத்துரைத்த அவர், படையினரில் பலர் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் என்ற கருத்தை பலர் விமர்ச்சிப்பதாக குறிப்பிட்டார்

எனினும் தாம் உட்பட இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மற்றும் ஜனாதிபதி ஆகியோர் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் வரை மாத்திரமே படித்தவர்கள் என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா