எரிவாயுவின் விலையினை சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிபடுத்த வேண்டும் : நுகர்வோர் விவகார சபை கோரிக்கை

0
168

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக எரிவாயுவினை விற்பனை செய்வதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எரிவாயுவின் நிர்ணய விலையினை பொதுமக்கள் பார்க்கும்ப் படி அதன் சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிப்படுத்த வேண்டும் என குறித்த அதிகார சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன், அதிக விலைக்கு எரிவாயுவினை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.