தேரர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம் – விமல் வீரவங்ச

0
394

எல்லே குணவங்ச தேரர் மற்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆகியோர் விடுத்த கோரிக்கை காரணமாகவே தான் உள்ளிட்ட தரப்பினர் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

ராமஞ்ஞை பௌத்த பீடத்தின் மாநாயக்கர் மக்குலேவே விமல தேரரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் பசில் ராஜபக்சவை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், அது அரசாங்கத்தை கொண்டு நடத்துவோரின் மனதை தேற்றலாம். எனினும் அதனை செய்வதற்கு அதிகம் தாமதமாகி விட்டது.

அவரை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என எண்ண முடியாது.

அதேவேளை எல்லே குணவங்ச தேரர் மற்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆகியோரை வரவழைத்து ஜனாதிபதி விடயங்களை தெளிவுப்படுத்தி, தேரர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே நாங்கள் 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்.

இதனை மற்றவர்கள் மீது சுமத்த மாட்டோம். இது நாங்கள் பொறுப்புக் கூற வேண்டிய முடிவு எனவும் வீரவங்ச தெரிவித்துள்ளார்.