“அண்ணாத்த” படம் எப்போது ரிலீஸ்?

0
573

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் “அண்ணாத்த”. இந்த படத்த இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டது.

படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பில் கலந்துக் கொண்டவர்கள் சிலருக்கு கொரோன தொற்று உறுதியானதால் மீண்டும் தடைப்பட்டது.

வரும் நவம்பர் 4-ஆம் தேதி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று படக்குழுவினர் பதிவிட்டுள்ளனர். படம் வெளிவருவதில் ஏற்படும் தாமதத்தை அறிந்து ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.