தமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு

0
366
Tamil Nadu government announces crackers bursting India Tamil News

தமிழகத்தில் தீபாவளி தினமன்று காலையில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. (Tamil Nadu government announces crackers bursting India Tamil News)

பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், கடந்த 23 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.

தீபாவளி மற்றும் பிற விழாக்களில் நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மாத்திரமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும் கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மாத்திரமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு தீபாவளி கொண்டாடும் இந்துக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், தீர்ப்பை எதிர்த்து பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கக்கோரி தமிழக அரசும் மனுதாக்கல் செய்த போதிலும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தீபாவளியன்று 2 மணி நேரம் மாத்திரமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியும் என்றும், அந்த 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளது.

இதன் பின்னர், நேற்று முன்தினம் புதிய அறிவுரை ஒன்றை உத்தரவாக வெளியிட்டதில் தமிழ் நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் 4 மணி முதல் 5 மணி வரை, இரவில் 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்றும் கூறியிருந்தது. இந்த நேரத்தில் மாநில அரசு மாற்றம் செய்யலாம் என்றும் கூறியிருந்தது.

இதன்படி மாநில அரசு ஆலோசனை நடத்தி பட்டாசு வெடிக்கும் நேரத்தை இன்று அறிவித்துள்ளது.

மேலும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களையும், எந்தெந்த இடங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

காஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி

ஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி

என் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி

தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

மகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்

சபரிமலை கலவரத்தில் ஈடுபட்ட 3505 பேர் கைது

Tamil News Group websites

Tags; Tamil Nadu government announces crackers bursting India Tamil News