சபரிமலையில் தொடரும் பதற்றம் ; நீதிமன்றில் பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனுத்தாக்கல்

0
535
Brahmin association filed review petition Sabarimala issue

சபரிமலையில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் இன்றைய தினம் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளது. (Brahmin association filed review petition Sabarimala issue)

அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என கூறிவிட்டது.

எனவே, அவசர சட்டமாவது இயற்றி இந்த தீர்ப்பை இரத்து செய்ய வேண்டாம் எனத் தொடர்ந்து இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களை அங்கு செல்ல விடாமல் போராட்டக் குழுவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் சபரிமலை செல்லும் பாதைகளில் பதற்றம் நீடிப்பதுடன், சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதையடுத்து தடியடியும் நடத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பிராமணர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில் சபரிமலையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளதாகவும், அதனை மறுவாய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேபோன்று ஏற்கனவே தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Brahmin association filed review petition Sabarimala issue